தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது, துறைவாரியான செயல்பாடுகள், ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை ஆகியவை குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் கொண்டு வருவதற்கும் இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்கும், புதிய முதலீடுகளை வரவேற்பதற்கும் ஒப்புதல் அளிப்பது, வேலை வாய்ப்பை அதிகரிப்பது குறித்தும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News