ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்: சர்ச்சை ஆடியோ

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி.உதயகுமாருக்கு சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் மிரட்டல் விடுத்த ஆடியோ உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மகேந்திரவாடியைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். ஓ.பி.எஸ். ஆதரவாளரான இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு பாடை கட்டத் தயாராக இருப்பதாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி சங்கரன்கோவில் அருகே நெல்கட்டும்செவலில் சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 307-ஆவது பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.

அமைச்சர் பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்

இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு நெல்கட்டும்செவல் கிராமத்திற்கு வர இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மிரட்டல் விடுத்த இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இது குறித்து தற்போது வரை அவர் மீது புகார் எதுவும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே சரவண பாண்டியனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சங்கரன்கோவில் டிஎஸ்பியை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்தில் காத்திருந்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post