``நான் தான் அதிமுகவின் பொதுச் செயலாளர்” - சசிகலா தடாலடி பேட்டி!

“நான் தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன்” என சசிகலா பேட்டியளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி பகுதியில் மக்களை சந்திக்கும் பயணத்தை தொடர்ந்தார். அதை தொடர்ந்து நேற்று திண்டிவனம் வானூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

image

அப்போது பேசிய அவர், அதிமுக அடிமட்ட தொண்டர்களின் சட்ட திட்டபடி நான் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன். அதிமுகவில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தான் குழப்பம் விளைவிக்கிறார்கள். தொண்டர்கள் தெளிவான மனநிலையோடு இருக்கிறார்கள். விரைவில் அதிமுக ஆட்சி அமைப்பேன்” என்றார். பின்னர் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உயர்த்தி இருப்பது, ஏழை எளிய மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது” என்றார்.

- செய்தியாளர்: ஜோதி நரசிம்மன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post