ஸ்ரீபெரும்புதூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சோகம்: குழந்தை உட்பட 3 பேர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே இரண்டு கார்கள் மீது சிமெண்ட் மிக்சர் லாரி மோதிய விபத்தில் 7 மாத குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வஞ்சுவாஞ்சேரி அருகே ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது, சாலையில் எதிர்திசையில் கட்டுப்பாட்டை இழந்து வந்த சிமெண்ட் மிக்சர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

image

இதில், ஒரு காரில் வந்த கமல்குமார் (43) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரான தேவேஷ்குமார் (35) என்பவரை மீட்டு ஆபத்தான நிலையில் மதுத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்து பார்த்தபோது அவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான மற்றொரு காரில் மூன்று சிறுவர் உட்பட 6 பேர் வந்துள்ளனர். அதில் 7 மாத குழந்தை அம்சிகா பிரபஞ்சினி பரிதாபமாக உயிரிழந்தது. மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

image

விபத்துக்குள்ளான காரை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கும் பணியில் சோமங்கலம் போலீசார் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post