'பாஜகவின் லாஜிக்கில் அதிமுக பலி' - நாஞ்சில் சம்பத்

பாஜகவின் லாஜிக்கில் அதிமுக பலியாகியிருக்கிறது என பூந்தமல்லியில் நாஞ்சில் சம்பத் பேட்டியளித்தார்.

திருவள்ளூர் மாவட்ட திமுக, பூந்தமல்லி தொகுதி இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பட்டறை பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் நாசர், திமுக நிர்வாகிகள் நாஞ்சில் சம்பத், தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

image

பின்னர் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில்...: ஓபிஎஸ்ஸை ஓரம் கட்டுவதாகக் கருதி கொண்டிருக்கிறார்கள். ஒரு ஜனநாயக அநீதியை அரங்கேற்றி இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி இடை சறுகலாக வந்தவர், உயர்நீதிமன்ற தீர்ப்பு கண்டுகொள்ளப்படவில்லை என்பதைவிட அதன் மீது அத்துமீறலை நடத்தி இருக்கிறார்கள்.

image

இதற்கு பின்னால் பாஜக விளையாட்டு இருக்கிறது என்பதை நாடு புரிந்து கொண்டிருக்கிறது. இன்று மராட்டியத்தில் செய்கிற வேலையை நாளை தமிழகத்தில் அவர்கள் செய்வார்கள். செல்வாக்கு உள்ள கட்சியை உடைப்பதும், உருக்குலைப்பதும், ஊடுருவுவதும் பாஜகவின் லாஜிக் அதில் அதிமுக பலியாகியிருக்கிறது என தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post