பாஞ்சாலங்குறிச்சியில் விமர்சையாக நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் விழா

பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மற்றும் வீரசக்கதேவி ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முதல் குரல் எழுப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மற்றும் கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலயத்தில் திருவிழா தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற்றது.

image

இந்த திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு ஜோதியை மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினர் பாஞ்சாலங்குறிச்சி கொண்டுவந்து ஆலயத்தில் வைத்து வழிபட்டனர்.

image

இதைத் தொடர்ந்து வம்சாவளியினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் மேலும் கட்டபொம்மன் கோட்டையில் உள்ள வீரபாண்டி கட்டபொம்மனின் வரலாறு குறித்த ஓவியக் கண்காட்சியும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

image

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெறவில்லை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கட்டபொம்மன் விழா மற்றும் வீரசக்கதேவி ஆலய திருவிழா நடைபெறுவதால் தமிழகம் முழுவதுமிருந்து பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த திருவிழா நடைபெற உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post