மதம் மாற மறுத்ததால் அந்தரங்க புகைப்படங்களை பரப்பிய இளைஞர் கைது

திருப்பூரில் இன்ஸ்டாகிராமில் பழகி ஒன்றாக வாழ்ந்த பெண்ணை மதம் மாற்ற வற்புறுத்தியதோடு, அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூரை சேர்ந்த இமான் ஹமீப் என்பவர், கரூரை சேர்ந்த 21 வயது பெண்ணுடன் பழகியுள்ளார். இருவரும் திருப்பூரில் 2 மாதங்கள் ஒன்றாக வசித்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண்ணை மதம் மாறுமாறு இமான் ஹமீப் வற்புறுத்தியுள்ளார். அதை ஏற்காத அந்தப் பெண் பிரிந்து சென்றதால் ஆத்திரமுற்ற இமான் ஹபீப், தாங்கள் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

image

இதையும் படிங்க... கடும் வெப்பம் - பள்ளி நேரத்தை மாற்றியமைக்க மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்

இதனால் இமான் ஹமீப் மீது, சமூக வலைதளங்களில் அந்தரங்க படங்களை பரப்பி வருவதாக கடந்த 4ம் தேதி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அப்பெண் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர் நல்லூர் போலீசார். சாதிப் பெயரை சொல்லி திட்டியது, பெண்ணை கொடுமை செய்தது, அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இமான் ஹமீபை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post