அட்சய திருதியை - நகைக் கடையில் குவிந்த மக்கள்: தமிழகத்தில் எத்தனை டன் தங்கம் விற்பனை?

அட்சய திருதியையான நேற்று 18 டன் தங்கத்தை வாங்கி குவித்த தமிழக மக்கள். 2019 ஆம் ஆண்டைவிட 30 விழுக்காடு அதிகம் என தங்க வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நேற்று அட்ஷய திருதியை நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நன்நாளில் தங்க நகை வாங்கினால் அது மேன்மேலும் பெருகும் என்ற ஐதீகம் தமிழக மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே நேற்றைய தங்க நகைகள் விற்பனை வெளிப்படுத்துகிறது.

image

இது குறித்து தங்க நகை விற்பனையாளர்கள் கூறுகையில், அட்ஷய திருதியை நாளான நேற்று எதிர்பார்த்த அளவை விட கூடுதலாகவே விற்பனை இருந்ததாக தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் சுமார் 18 டன் தங்கம் விற்பனையாகியுள்ளதாக கூறும் தங்க நகை விற்பனையாளர்கள்,

இது 2019 ஆம் ஆண்டை விட 30 விழுக்காடு கூடுதல் விற்பனை என்கின்றனர். கொரோனா காரணமாக 2020, 2021ஆம் ஆண்டு விற்பனை குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான விற்பனை அதிகரித்துள்ளது. சாதரணமாக மற்ற நாட்களில் தினசரி 7 முதல் 8 டன் வரையில் தங்கம் விற்பனையாகும் என்றும் வியாபரிகள் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post