திமுகவின் ஓராண்டு ஆட்சியில் 2,666 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேலூர் திருவுடையம்மன், பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் உள்ளிட்ட ஆலயங்களில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மூவாயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துகள் மட்டுமே மீட்கப்பட்டதாகவும் ஆனால் ஓராண்டு திமுக ஆட்சியில் இரண்டாயிரத்து 666 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசியல் செய்வதற்காக சிலர் இறைவனை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இதையும் படிக்கலாம்: இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து! - மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News