15 லி. கொள்ளளவு வாகனத்துக்கு 18.4 லி. பெட்ரோல் நிரப்பியதாக ரசீது? புகாரளித்த வாகன ஓட்டி

சென்னை அருகே இருசக்கர வாகன டேங்கின் கொள்ளளவை விட அதிகமாக பெட்ரோல் நிரப்பியதாகக் கூறி பணம் வசூலித்ததாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே அத்திபட்டு பகுதியில் செயல்படும் பாரத் பெட்ரோலியத்தின் தனியார் சில்லரை விற்பனை மையத்தில் சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த சோனாலி என்ற வாடிக்கையாளர் பெட்ரோலை நிரப்ப சொல்லியுள்ளார். பெட்ரோல் முழுவதும் நிரம்பியதும் 18.4 லிட்டருக்கு ரசீது கொடுத்துள்ளனர். பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 15 லிட்டர் இருக்கையில் 18.4லிட்டர் நிரம்பியதாக ரசீதை கண்டு சந்தேகித்த வாடிக்கையாளர் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

image

புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனத்தில் இருந்த அனைத்து பெட்ரோலையும் மீண்டும் வெளியே எடுத்து அளந்து பார்த்தனர் அப்போது 15லி மட்டுமே வந்ததாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் சார்பில் பெட்ரோல் டேங்க்கை கழட்டி எடுக்க சொன்னதை அடுத்து மீண்டும் டாங்கை கழற்றி பெட்ரோலை எடுத்தனர். அப்போது கூடுதலாக 3 லிட்டர் இருக்கையில் மொத்தம் 18லி இருந்தது ஆனால் குறைந்தபட்சம் 3 லிட்டர் பொட்ரோல் இருந்தால்தான் வாகன இயங்கும் என வாடிக்கையாளர் வாதிட்டிருக்கிறார்.

இதுகுறித்து வாடிக்கையாளர் கூறுகையில் சுமார் மூன்று லிட்டர் அளவு பெட்ரோல் தனது இருசக்கர வாகனத்தில் இருப்பு இருந்ததாகவும், வெறும் 15 லிட்டர் பெட்ரோலை செலுத்திவிட்டு 18.4 லிட்டருக்கு பணம் வசூல் செய்ததாகவும் இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாரின் புகார் அளித்துள்ளதாகவும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாக தெரிவித்தார். இது குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது போடப்பட்ட பெட்ரோலுக்கு தான் பணம் வசூல் செய்ததாக தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து அவரது புகார் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post