சென்னை - அம்பத்தூர் அருகே திருமணமான ஐந்தே நாட்களில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடக்கு கொரட்டூர் - அக்ரகாரத்தைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும், சேலத்தைச் சேர்ந்த அவரது உறவினர் ராஜா என்பவருக்கும் கடந்த 4 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பின் புதுமணத் தம்பதியர் சேலத்திலிருந்து கொரட்டூர் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும் சிகிச்சை பலனின்றி, சந்தியா உயிரிழந்துள்ளார்.
கொரட்டூர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், விருப்பமின்றி திருமணம் நடந்ததால் சந்தியா தற்கொலை செய்தது தெரியவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய செய்தி: நோட்டாவை விட குறைவான வாக்குகள் - உ.பி. தேர்தலில் சோபிக்காத ஓவைசி கட்சி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News