
அரசு இ-சேவை மையங்களில் பதிவு செய்தால் தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மாத இதழ் இல்லம் தேடி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தரமணியில் அரசுக்கு சொந்தமான அச்சகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதந்தோறும் 'தமிழரசு' இதழ் அச்சிடப்படுகிறது. அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சாதனைகளும் இதில் தொகுத்து வெளியிடப்படுகிறது. மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் 'தமிழரசு' இதழ் பயனுள்ளதாக இருக்கும். 'தமிழரசு' மாத இதழ் தமிழ் பதிப்புக்கு 2,000 ரூபாயும், ஆங்கிலப் பதிப்புக்கு 2,400 ரூபாயும் ஆண்டு சந்தாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இதழை மக்கள் அனைவரும் பெற்று பயனடையும் வகையில் அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக சந்தா தொகை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.tamilarasu.org என்ற இணையதளத்திலும் சந்தா தொகையை நேரடியாகச் செலுத்தலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இன்று முதல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை மெட்ரோ ரயில்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News