
தமிழக பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர், பட்ஜெட் உரைக்கு முன்னர் பேச வாய்ப்பு அளிக்கப்படாததை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இன்று 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டபேரவையில் தாக்கல் செய்ய ஆரம்பித்தவுடன், அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தியதை கண்டித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டசபையில் கோஷங்கள் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து அமைதியாக பட்ஜெட் உரையை கேட்குமாறு அதிமுகவினருக்கு சபாநாயகர் அப்பாவு அறிவுரை வழங்கினார். இதன்பின்னர் தமிழக பட்ஜெட் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக அரசை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News