'பிரதமரிடம் பேசுங்கள்' - ஊர்தி நிராகரிப்பு தொடர்பாக முதல்வருக்கு ஓ.பி.எஸ் வலியுறுத்தல்

குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியினை பங்கேற்கச் செய்வது தொடர்பாக, பிரதமரிடம், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் பேச வேண்டும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அதிமுக தனது முழு ஆதரவை நல்கும் எனத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காதது வருத்தமளிப்பதாகவும், தமிழ்நாட்டில் கலை, கலாசாரம், விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆகியவற்றை மத்திய அரசிடம் விளக்கி அனுமதியை பெற்றே ஆக வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post