விரட்டிய நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சைக்கிளில் வேகமாக சென்ற சிறுவன் தவறி விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை அம்பத்தூர் பன்னீர்செல்வம் தெருவில் சிறுவன் ஒருவர் வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அவரை இரு தெருநாய்கள் வேகமாக விரட்டியதால் பதறிப்போன அவர், சைக்கிளை வேகமாக ஓட்டி தப்பிச் சென்றபோது தவறி விழுந்து காயமடைந்தார். கடந்த 7ஆம் தேதி நடந்த சம்பவத்தின் வீடியோ வெளியான நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News