தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் - பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனை

நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது இதன் எதிரொலியாக தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசின் அறிவுறத்தலின் படி தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி சுதாகர் தெரிவித்தார். காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஒரகடம், ஸ்ரீபெரும்பதூர் என மாவட்டம் முழுவதும் தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில நபர்கள் மட்டுமே ஊரடங்கின் போது வெளியே வருகின்றனர். அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர். தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்

எப்போதும் மக்கள் நடமாட்டம் போக்குவரத்து நெரிசலுடன் காணப்டும் காஞ்சிபுரம் காந்தி சாலை, காமராஜர் சாலை, பேருந்து நிலையம், பூக்கடை சத்திரம் ஆகிய பகுதிகளில் அடைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post