ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: மதியம் முதல் நடந்தது என்ன? - ஒரு விரிவான டைம்லைன்!

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்த டைம்லைனை பார்ப்போம்.

காலை 11.45 மணி: Mi-17V5ரக ஹெலிகாப்டரில் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது.

நண்பகல் 12.20 மணி: ஹெலிகாப்டர் நஞ்சப்ப சத்திரம், காட்டேரி அருகே விபத்து நடந்தது உறுதியானது. முப்படைத்தளபதி மற்றும் அவரது மனைவி பயணித்த தகவல் வெளியானது.

பிற்பகல் 1மணி: பயணித்தவர்களில் 4 பேர் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகிய நிலையில் மலைப்பாதையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மதியம் 2மணி: ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் தீவிரம்

மதியம் 2.15மணி: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு!

மதியம் 2.20மணி: விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் குறித்து மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை. ஹெலிகாப்டர் விபத்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

மதியம் 2.30மணி: மீட்புப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கோவை செல்வதாக தகவல் வெளியானது.

மதியம் 3மணி: தரையிறங்க 5 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியதாக தகவல்

மதியம் 3.10 மணி: விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரி அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு. நாடாளுமன்றத்திற்கு ராஜ்நாத் சிங் வருகை.

மாலை 4.50 மணி: ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ தகவல்

மாலை5.10மணி: பாதுகாப்புக்கான அமைச்சரவைக்கூட்டம் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு

image

மாலை 6.05 மணி: நீலகிரி மாவட்டம் காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post