இனி மின்னணு முறையில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை நகல்கள் - அரசாணை வெளியீடு-No more electronic driving license, family card copies

மின்னணு முறையில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களைப் பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை டிஜிட்டல் முறைப்படி வழங்கவும், அவற்றை பார்வையிட்டு சரிபார்த்திடவும் வகைசெய்வதே டிஜிட்டல் லாக்கர் முறையாகும். இதன்மூலம் குடிமக்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும்போது அதற்குத் தேவையான ஆதார ஆவணங்களை, டிஜிட்டல் லாக்கர் வசதியில் இருந்தே எடுத்து இணைத்துக் கொள்ளலாம்.

வாகன ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றின் மின்னணு நகல்களை மக்களுக்கு இந்த டிஜிட்டல் லாக்கர் முறையின் மூலமாக வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பிலுள்ள அனைத்து மென்பொருள்களையும் டிஜிட்டல் லாக்கர் முறையுடன் இணைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

'கொங்குநாடு' முழக்கமும்.. தனி மாநில கோரிக்கைகளும் - மத்திய அரசின் விளக்கம் 


 

Wondershare Software

Post a Comment

Previous Post Next Post