தனியார் பேருந்தை வழிமறித்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்திய மூவர் கைது செய்யப்பட்டனர்.
கடலூரில் இருந்து புதுவை நோக்கி சென்ற தனியார் பேருந்தை பெரியகாட்டுபாளையம் எனுமிடத்தில் மூவர் வழிமறித்தனர். அரிவாளை காண்பித்து ஓட்டுநரை மிரட்டிய அவர்கள் கண்ணாடியை சேதப்படுத்தியதோடு, நடத்துனரிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றனர். பட்டப்பகலில் போக்குவரத்து மிகுந்த சாலையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்தினர். அதில் பிரிதிவிராஜன், சீனிவாசன், மருதநாயகம் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூவரையும் கைது செய்து சிறையிலடைத்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News