
இரண்டு மாதங்களுக்குப் பின்னர், சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக, நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக சதுரகிரியில் உள்ள மலைக்கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழை ஓய்ந்ததால், 19ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யும் பட்சத்தில், பக்தர்கள் மலை ஏற அனுமதி மறுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. நீர் ஓடைகளில் குளிப்பதற்கும், மலைப்பகுதிகளில் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News