ராமேஸ்வரத்தில் உள்ள உயர் சக்தி டிரான்ஸ்மீட்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியின் தரைவழி ஒளிபரப்பு சேவை 31-ஆம் தேதியுடன் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது.
இத்தகவலை ராமேஸ்வரம் தூர்தர்ஷன் மையத்தின் துணை இயக்குநர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எனினும் இப்பகுதியில் உள்ள மக்கள் தூர்தர்ஷன் DTH சேவை மூலம் பொதிகை உள்ளிட்ட தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பை தொடர்ந்து காண இயலும் என்றும் அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:
News