
சென்னை மின் பகிர்மான வட்டத்தில் 12,297 மின் இணைப்புகள் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்து, இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மின்தடை இருக்கக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் உள்ள 223 துணை மின் நிலையங்களில் 1 மின் நிலையத்தில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மின் பகிர்மான வட்டத்துக்குள் கிட்டத்தட்ட 44,50,000 மின் இணைப்புகள் உள்ளன, அதில் 12,297 மட்டும் பாதுகாப்பு காரணமாய் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை குறைவது, வெள்ள நீர் வடிவதற்கேற்ப விரைந்து மின் இணைப்பு வழங்கப்படும். பழுதை சீர் செய்யும் பணிகள் புளியந்தோப்பு, மேற்கு மாம்பலம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது, விரைவில் சீரமைக்கப்படும்.

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் எந்த அளவு பாதிப்பும் ஏற்படவில்லை. மின்சாரத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. அது மாதிரியான சம்பவங்கள் நடைபெறக் கூடாது. தமிழகம் முழுவதும் புகார்கள் அடிப்படையில் உயரதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் தயார் நிலையில் இருப்பதால், உடனுக்குடன் பிரச்சனைகள் சரிசெய்யப்படும். 1 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது. அதே போல் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். இதுவரை 1,508 புகார்கள் மின்னகம் மூலம் வந்துள்ளது. 607 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 907 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீரான மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டால் 94987 94987 என்கிற எண்ணுக்கு உடனடியாக புகார்களை தெரிவிக்க வேண்டும்'' என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Minister Senthil Balaji said that 12,297 connections in the Chennai power distribution circuit have been cut off due to security concerns.
Electricity Minister Senthil Balaji inspected the control room at the power plant's head office on Anna Road in Chennai. The Chief Minister has advised that there should be no blackout. Out of 223 substations in Chennai, only 1 has been shut down.
There are about 44,50,000 power connections within the Chennai power distribution circuit, of which only 12,297 have been cut off due to security concerns. When the rainfall is low, the power connection will be provided as soon as the flood water forms. Repairs are underway in areas including Puliyanthoppu, West Mambalam and Valluvar Kottam and will be rehabilitated soon.
No precautionary measures were taken by the Tamil Nadu government. No fatalities have been reported so far. Incidents like that should not happen. Problems will be rectified immediately as high-level committees are ready based on complaints across Tamil Nadu.
1 lakh power poles are ready. All equipment is ready. The staff is ready as well. So far 1,508 complaints have come through the e-mail. 607 complaints have been resolved. Action is being taken on 907 complaints. A balanced power supply is in place. In case of power outages, complaints should be made immediately to 94987 94987, ”said Senthil Balaji.
Tags:
News