எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு - கைதானவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் கைதான மணிகண்டனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கீரனூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி பூமிநாதன் ஆடு திருடர்களை பிடிக்கச் சென்றபோது கொல்லப்பட்டார். ஆடு திருடர்களை பிடிக்க சென்ற எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மணிகண்டன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு திருமயம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த முதல் குற்றவாளி மணிகண்டனை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையை முடித்து நாளை பகல் 1 மணிக்கு மணிகண்டனை ஆஜர்படுத்த கீரனூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

1 Comments


  1. தமிழ் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தேவையான கருவிகளை www.valaithamil.com இணையதளத்தில் கண்டறியலாம்.

    மேலும் வலைத்தமிழ் நடத்தும் கதை & கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு ரூ.1000 வரை பரிசு வெல்லும் வாய்ப்பையும் பெறுங்கள்.

    ReplyDelete
Previous Post Next Post