தமிழகத்தில் இன்று முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்றுமுதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
குறிப்பாக ராமநாதபுரம், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவித்திருக்கிறது. இவைதவிர, டெல்டா மாவட்டங்கள், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. மேலும், நவம்பர் 27,28 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் அதிகபட்சமாக போடிநாயக்கனூர், ராமநாதபுரத்தில் தலா 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ராமேஸ்வரம், கூடலூர், வீரபாண்டி, ஆயக்குடி, கடலாடி, ஆழியார் பகுதிகளில் தலா 5 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது.
Tags:
weather report