
தமிழகத்தில் அனைத்து கோயில் கணக்குகளையும் தணிக்கை செய்து மனுவாக தாக்கல் செய்ய இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் கணக்குகளையும் மத்திய தணிக்கை குழு மூலம் தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரி தொடரப்பட்டிருந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவில் வரவு செலவுகளை வெளியாட்களை வைத்து தணிக்கை செய்ய சட்ட விதிகள் அனுமதிப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அனைத்து கோவில்களின் வரவு செலவுகளை தணிக்கை செய்து மனுவாக தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News