சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் இன்று பாஜகவில் இணைந்தார்.
இன்று திருப்பூரில் நடைபெற்றவரும் பாஜக கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் அக்கட்சியில் சேர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஹெச்.ராஜா மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஜே.பி நட்டாவும் கலந்துகொள்ளவுள்ளார்.
நூல் விலை உயர்வால் தொழிலாளர்கள் பாதிப்பு - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த 11 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் சோழவந்தான் மாணிக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக ஏற்படுத்திய 11 பேர்கொண்ட வழிகாட்டுதல் குழுவிலும் இவர் முக்கிய உறுப்பினராக இடம்பெற்றிருந்தார். இன்று அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை விரிவுபடுத்துவது குறித்த பேச்சு நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் மாணிக்கம் பாஜகவில் இணைந்திருக்கிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.