உடல்நலம் குன்றி கணவர் உயிரிழந்த நிலையில் மயக்கமுற்று மனைவியும் உயிரிழப்பு-Unconscious wife dies after husband dies due to ill health

உடல்நலக் குறைவால் கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில், கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (80). இவருடைய மனைவி பானுமதி (70). இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், உறவினர் ஒருவரின் ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக முடக்குவாத நோயால் படுத்த படுக்கையாக இருந்த முதியவர் ராமலிங்கம் திடீரென உடல்நிலை மோசமடைந்து நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

image

இதனால, அதிர்ச்சியில் உறைந்துபோன மனைவி பானுமதிக்கு, தன்னை இந்த வயதிலும் உயிருக்கு உயிராக நேசித்த வாழ்ந்த கணவர் ராமலிங்கத்தின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கணவர் தன்னை விட்டு பிரிந்து விட்டாரே என்ற துயரத்தில் கணவரின் உடல் அருகே அழுது கொண்டிருந்த பானுமதியும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பின்னர் கணவன் மனைவி இருவரின் உடல்களையும் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று வளர்ப்பு மகன் ஜெயராமன் இறுதிச் சடங்குகளை செய்தார். கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post