புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு: நெடுஞ்சாலையை சூழ்ந்த வெள்ளம்

சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதை அடுத்து செங்குன்றம் - மாதவரம் நெடுஞ்சாலையில் வெள்ளம் சூழ்ந்தது.
 
புழல் ஏரியில் திறக்கப்படும் உபரி நீர், நாரவாரிக்குப்பம், சாமியார் மடம், தண்டல்கழனி, வடகரை, வடப்பெரும்பாக்கம், கொசப்பூர் உள்ளிட்ட பகுதிகளை கடந்து எண்ணூர் கழிமுக பகுதியில் கடலில் கலக்கும். இந்நிலையில், திறக்கப்பட்ட உபரி நீருடன், மழை நீரும் சேர்ந்ததால், செங்குன்றம் - மாதவரம் நெடுஞ்சாலையில், வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக வடப்பெரும்பாக்கம் பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், மூலக்கடை, மாதவரம் செல்வோர், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுங்சாலை வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post