வேலூர்: பொன்னை ஆற்றில் வெள்ளம் - கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

பொன்னை ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி நீர் வருவதால், கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சித்தூரில் உள்ள கலவகுண்டா அணை நிரம்பியதை அடுத்து அதில் இருந்து வெளியேறும் நீரால் வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது 10,188 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பொன்னை ஆற்றின் கரையோர கிராமங்களான பாலே குப்பம், தெங்கால், பொன்னை, பரமசாத்து, மாத்தாண்ட குப்பம், கீரை சாத்து, கொல்லப்பள்ளி, மேல்பாடி மற்றும் வெப்பாலை ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் யாரும் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post