சென்னை: பிறந்து சில நாட்களே ஆன கைக் குழந்தையுடன் மழை நீரில் சிக்கிய பெண் மீட்பு

மழை நீரில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த குழந்தை பெற்று சில நாட்களே ஆன தாய் மற்றும் சேயை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

சென்னை பெரும்பாக்கம், இந்திரா நகர் ஏரியை ஒட்டிய பகுதியில் பெய்த அதி கனமழை காரணமாக இடுப்பளவிற்கு மழைநீர் தேங்கி, குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் உள்ளவர்கள் வெளியில் வர முடியாமல் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் குழந்தை பெற்ற பெண் ஒருவர் தனது கைக் குழந்தையுடன் வெளியில் வர முடியாமல் தவித்து வந்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் அந்த பெண்ணை நாற்காலியில் அமர வைத்து தாய் சேய் இருவரையும் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள முகாமில் தங்க வைத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post