கோவை மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்திய 48 யூடியூப் சேனல்கள் மீது வழக்குப் பதிவு-Case registered against 48 YouTube channels

கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் 23(2) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கு முன்னதாக, கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி, அங்கு தொடர்ந்து படிக்க விரும்பாமல் மாநகராட்சிப் பள்ளியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி, கடந்த 11ஆம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட 3 பெயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து மாணவியின் செல்போன் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்ததில், அவருக்கு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்தது கண்டறியப்பட்டது.மாணவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, உடுமலைப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, ஆசிரியரின் பாலியல் தொல்லை பற்றி மாணவி புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவந்தது.

இதையடுத்து சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனின் பெயரை வழக்கில் சேர்த்த காவல் துறையினர் அவரைத் தேடினர். அவர் தலைமறைவானதோடு செல்போனும் அணைக்கப்பட்டிருந்தது. பின்னர் செல்போன் ஆன் செய்யப்பட்டபோது, மீரா ஜாக்சன் பெங்களூருவில் பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்த தனிப்படையினர், அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து நன்கு அறிந்த பிறகும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காததால், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

image

கோவைக்கு கொண்டுவரப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் காவல்துறையினர் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, மீரா ஜாக்சன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளியின் முதல்வர் கைது செய்யப் பட்டதால், மாணவியின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.



Coimbatore Metropolitan Cyber ​​Crime Police have registered a case against 48 YouTube channels under Section 23 (2) of the Pokcho Act for revealing the identity of a 12th class student who committed suicide in Coimbatore.

Prior to this, Coimbatore R.S. The 17-year-old, a 12th class student of Chinmaya Vidyalaya in Puram, has joined the corporation school as he does not want to continue his studies there. In this situation, the student committed suicide by hanging himself at home on the 11th and wrote a letter demanding action against 3 names including Mithun Chakraborty, a teacher at Chinmaya Vidyalaya. Following this, the student's cell phone was seized and examined and it was found that he was sexually harassed by the teacher Mithun Chakraborty.

Teacher Mithun Chakraborty was arrested under the Bokso Act and imprisoned in Udumalaipettai while students and women's organizations were involved in the struggle for justice. Meanwhile, it was revealed that no action has been taken on the student's complaint about the teacher's sexual harassment.

Following this, the police searched for the name of Mira Jackson, the principal of Chinmaya Vidyalaya School, in the case. He went into hiding and his cell phone was switched off. When the cell phone was later turned on, privates discovered Mira Jackson was hiding in Bangalore, where they rushed to arrest her.

Police say Mira Jackson, the school principal, was arrested under the Pokோmon Act because she did not report the incident to police, even after learning of the student's sexual harassment.

Police spent 12 hours questioning school principal Mira Jackson, who was brought to Coimbatore. She was later produced at the home of Women's Court Judge Nandini. Mira Jackson was jailed in Coimbatore Central Jail after a judge ordered her to be remanded in custody until the 26th. The student's body was recovered by his relatives after the school principal was arrested.

Post a Comment

Previous Post Next Post