தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று செல்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வர உள்ளார். மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து, விவேகானந்தர் நினைவு மண்டபம், பகவதி அம்மன் கோவில், ராமாயண சித்திரகூடம் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.
இதனை தொடர்ந்து நாளை மாலை (வியாழக்கிழமை) அவர் சென்னை புறப்பட்டு செல்கிறார். ஆளுநரின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
Tamil Nadu Governor RN Ravi is leaving for Kanyakumari district today for a two-day visit.
Governor RN Ravi, who is on a flight from Chennai to Thoothukudi, is coming to Kanyakumari by car from there. At 4 pm, he pays homage to the Thiruvalluvar idol located in Kanyakumari. Following this, he visits the Vivekananda Memorial Hall, the Bhagwati Amman Temple and the Ramayana Art Gallery.
Following this, he will leave for Chennai tomorrow evening (Thursday). Heavy police security arrangements have been made in Kanyakumari following the Governor's visit. A consultative meeting was held yesterday under the chairmanship of District Collector Arvind and District Superintendent of Police Badrinarayanan regarding the preparations for the Governor's visit.
Tags:
News