மதுரை தேவர் ஜெயந்தி: பேருந்து மீதேறி ரகளை செய்தது தொடர்பாக 28 பேர் கைது

மதுரை தேவர் ஜெயந்தி விழாவில் பேருந்து மீதேறி ரகளை செய்தது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவின் போது கோரிப்பாளையம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விழாவின்போது மதுரையின் பல பகுதிகளில் இருசக்கர வாகனங்களை அதிவிரைவாக இயக்கி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது தொடர்பாக 150 வாகனங்களுக்கு இ-சலான் முறையில் வழக்குப்பதிவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post