சென்னை: ரயில் மீது ஏறி காத்தாடி பிடிக்க முயன்றதால் விபரீதம்; 14 வயது சிறுவன் உயிரிழப்பு-Chennai: Tragedy after trying to catch a kite by boarding a train; 14-year-old boy killed

சென்னையில் ரயில்மீது ஏறி காத்தாடி பிடிக்க முயன்ற 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிவன்நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காசிம். 14 வயதான இவர், தனது நண்பர்களுடன் கடந்த 21-ஆம் தேதி தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் ரயில்வே யார்டில் காத்தாடி விட்டு கொண்டிருந்தபோது, நூல் அறுந்து ரயிலில் மேலுள்ள மின்சார கம்பியில் சிக்கியுள்ளது. உடனடியாக அந்த சிறுவன், பெட்ரோல் ஏற்றிவந்த கூட்ஸ் ரயிலில் ஏறி அதனை எடுக்க முயற்சி செய்தபோது, சிறுவனின் கை மின்சார ஒயரில் பட்டு தூக்கி வீசப்பட்டான்.


உடனடியாக சிறுவனை மீட்ட அப்பகுதி மக்கள், அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.



A 14-year-old boy was electrocuted while trying to catch a kite on a train in Chennai.

Abdul Qasim hails from the Sivannagar area of ​​New Washermenpet, Chennai. The 14-year-old was with his friends when he was leaving a kite at the WAC Nagar Railway Yard in Thandayarpet on the 21st when the thread cut and got stuck in the power line above the train. As soon as the boy got on the goods train loaded with petrol and tried to pick it up, the boy's hand was thrown on the electric wire.

Locals immediately rescued the boy and sent him to Stanley Government Hospital. There the boy was given intensive treatment. The boy, who was admitted to hospital with 60 percent burns, died today without treatment.

Post a Comment

Previous Post Next Post