லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகி விட்டது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
1,500 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் காவல்துறை அதிகாரி பாஸ்கரன் என்பவரை இடைநீக்கம் செய்து காவல்துறை கூடுதல் டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். அதேசமயம் தனக்கு எதிராக எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, இடைநீக்கத்தை எதிர்த்து பாஸ்கரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இடைநீக்க உத்தரவை ரத்து செய்து பாஸ்கரனை சாதாரண பதவியில் மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வு, இடைநீக்கம் செய்த பிறகு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.
அப்போது இவ்வழக்கை முன்வைத்து பேசிய நீதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன், ''ஊழல் வேர் பரவி கரையான்போல சமுதாயத்தை செல்லரித்துள்ளது. லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகி விட்டது. ஊழல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறுவோருக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது'' என்று கூறினர்.
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Chennai High Court judges have lamented that taking bribes has now become routine.
Police have issued an additional DGP order suspending Baskaran, a police officer, in connection with a Rs 1,500 bribery case. Baskaran, meanwhile, had filed a lawsuit against the suspension, claiming that no disciplinary action had been taken against him.
The special judge hearing the case quashed the suspension order and ordered that Baskerville be reinstated.
The bench comprising Justices Vaithiyanathan and Naqeeran, which heard the appeal filed on behalf of the Additional DGP against the order, concluded the case saying that it could not interfere with the order issued by the separate judge to reinstate Baskaran as no disciplinary action was taken after the suspension.
Speaking on the occasion, Justices Vaithiyanathan and Nakkeeran said, “Corruption has spread like wildfire. Bribery is now commonplace. Those who fail to take disciplinary action against corrupt officials should not be given promotions. ”
Tags:
News