கோவையில் இருந்து செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

தீபாவளியையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவையில் இருந்து பிற முக்கிய ஊர்களுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இரு மார்க்கத்திலும் செல்லும் ரயில்களில் கூடுதலாக படுக்கை வசதி ஒரு கொண்ட பெட்டியும், முன்பதிவு இல்லாத பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவையில் இருந்து மன்னார்குடி, மயிலாடுதுறை, சென்னை சென்ட்ரல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு செல்லும் ரயில்களில், தீபாவளிக்கு முன்பும் பின்பும் அதிக பயணிகள் செல்லும் வகையில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post