
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தரமற்ற இனிப்புகளை தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி எச்சரித்துள்ளார்.
பாதுகாப்பான இனிப்பு மற்றும் பலகாரங்கள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சேலத்தில் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி, சேலத்தில் மட்டும் இதுவரை 22 கேன் தரமற்ற எண்ணெய் மற்றும் 70 கிலோ ஜாங்கிரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தீபாவளி இனிப்புகள் மற்றும் பலகாரங்களின் தரத்தை கண்காணிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News