அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த 31 வயது ரஷ்ய பெண்
ரஷ்ய நாட்டை சேர்ந்த 31 வயதான மெரினா லெபடேவா (Marina Lebedeva) என்ற பெண் பிளாஸ்டிக் சர்ஜரியின் போது உயிரிழந்துள்ளார். அவர் சமூக வலைத்தளத்தில் பொருட்கள் பிராண்ட் செய்யும் INFLUENCER பணியை செய்து வந்துள்ளார்.
ரஷ்ய நாட்டில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவக் கூடம் ஒன்றில் அவர் மூக்கினை மாற்றி அமைப்பதற்கான பிளாஸ்டிக் சிகிச்சை செய்ய திட்டமிட்டு, அதனை மேற்கொண்டுள்ளார். இந்த சிகிச்சை Rhinoplasty என மருத்துவ உலகில் மிகவும் பிரபலம். சுமார் 4 லட்ச ரூபாய் செலவில் இந்த சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
View this post on Instagram
சிகிச்சைக்கு ஏதுவாக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சையை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மேற்கொண்ட போது, அவரது உடலின் வெப்பம் அதிகரித்துள்ளது. அவரது உயிரை மருத்துவர்கள் காக்க முயன்றும் அது முடியாமல் போயுள்ளது.
அவரது மரணத்திற்கு காரணமான மருத்துவக் கூடத்தின் மீது மருத்துவ அலட்சியத்தை சுட்டிக்காட்டி குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. அது நிரூபணமானால் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் ஆறு ஆண்டு வரை சிறை தண்டனை பெற வேண்டி இருக்குமாம்.
அவரது மரணம் குறித்து அவரது கணவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலமுறை சோதனை செய்த பிறகு தான் சிகிச்சை மேற்கொண்டதாகவும், மெரினாவுக்கு மரபு ரீதியான பாதிப்பு ஏதேனும் இதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் கூடம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.